Skip to main content

ABOUT US

 PROFESSIONAL DEVELOPMENT CENTER FOR TEACHERS - KATTANKUDY.

ஆசிரியர் வாண்மை விருத்தி நிலையம் காத்தான்குடி.


மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திலுள்ள பாடசாலை ஆசிரியர்களது தொழில் வாண்மையினை விருத்தி செய்யும் பணியினை மேற்கொள்வதற்காக;  பண்பு, அறிவு, வலுமிக்க, மனித நேய மாணவச் சந்ததியினரை உருவாக்கும் நோக்கில், கல்வியமைச்சின் “அண்மையிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை” எனும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், இந்த காத்தான்குடி ஆசிரியர் வாண்மை விருத்தி நிலையம் Professional Development Center for Teachers - Kattankudy) நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இந் நிலையமானது, ஆசிரியர்களுக்கான தொழில் வாண்மை விருத்திச் செயற்பாட்டினையும் ஆசிரியர்களின் பதவியுயர்வுக்கான வினைத்திறமைகாண் தடைப்பரீட்சைகளின்  (Efficiency Bar Examination) விரிவுரைகள், பயிற்சி வகுப்புக்கள், கருத்தரங்குகள், மாநாடுகள் மற்றும் பரீட்சைகள் போன்றவற்றை காத்தான்குடி ஆசிரியர் வாண்மை விருத்தி நிலையம் தொடர்ச்சியாக கட்டம் கட்டமாக நடாத்தி வருவதோடு, அதன் மேற்பார்வை மற்றும் வழிகாட்டுதல்களை மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் வலயக்கல்விப் பணிப்பாளர் Mr. MM. Jawad (SLEAS)  அவர்கள் வழங்கிவருகின்றார். 

அத்துடன் நிலையத்தின் சகல வேலைத்திட்டங்களையும், நிகழ்ச்சிகளையும்  சிறப்பான முறையில் கல்வி அமைச்சின் ஆசிரியர் கல்விப் பிரிவின் ஒருங்கிணைப்புடன் மேற்கொள்ளப்படுகின்றன. 

இந் நிலையத்தின் முகாமையாளராக திரு. A. றியாஸ் (SLTES) அவர்கள் கடமையாற்றி வருகின்றார்....

Vision and Mission : தூரநோக்கு & பணிக்கூற்று

Vision - தூரநோக்கு Mission - பணிக்கூற்று
"School providing Quality Education Completely" - தரமான கல்வியை நிறைவாக வழங்கும் பாடசாலைகள் "Developing the process of education standard teaching and learning in advising, guidance and training collaborate with school's society making research, collecting data and information and creating reports." - பாடசாலைச் சமூகத்துடன் இணைந்த வகையில் தரமான கற்றல் கற்பித்தலுக்கான ஆலோசனை, பயிற்சி, வழங்குவதுடன், ஆய்வுகள், அறிக்கைகள், தரவுகள், தகவல்கள் மூலம் கல்விச் செயற்பாட்டில் அபிவிருத்தியை ஏற்படுத்தல்."







Comments

Popular posts from this blog

2-II ஆசிரியர்களுக்கான EB Module நிறைவு பெறுதலும் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வும் - 28/02/2023 செவ்வாய்க்கிழமை

" ஆசிரியர்களை கௌரவிப்போம்." எனும் தொனிப்பொருளில் எமது காத்தான்குடி ஆசிரியர் வாண்மை விருத்தி நிலையத்தில் இடம்பெற்ற ஆசிரியர்களைப் பாராட்டி, சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு 28/02/2023 -----------------------------------------------------------------------------------------------------------------------------இலங்கை ஆசிரியர் சேவையின் புதிய பிரமாணக் குறிப்பிற்கமைய 2-II தரத்திலுள்ள ஆசிரியர்களின் பதவியுயர்வுக்கான இரண்டாம் வினைத் திறமைகாண் தடைப்பரீட்சைகளின் இதவடிவங்கள் (Efficiency Bar Examination Module) நிறைவுபெறுதலும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் காத்தான்குடி ஆசிரியர் வாண்மை விருத்தி நிலையத்தில் (காத்தான்குடி ஆசிரியர் மத்திய நிலையம்) 28/02/2023 செவ்வாய்க்கிழமைஅன்று முகாமையாளர் Mr. A. Riyas (SLTES) தலைமையில் இடம்பெற்றது..  மேலும் இந் நிகழ்விற்கு அதிதியாக, மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் வலயக் கல்விப் பணிப்பாளர்களான Mr. SMM. Ameer (SLEAS-I) அவர்களும் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் ஆரம்பப் பிரிவு ஆசிரிய ஆலோசகர்  Mrs. Thasleema Mohamed Rizvi (ISA) அவர்களும் கலந்து சிறப்பித்ததுடன் ...

ஆசிரியர்களுக்கான EB Module (2-II) நிறைவு பெறுதலும் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வும் - 1ஆம் கட்டம் 25.06.2024 (செவ்வாய்க்கிழமை)

இலங்கை ஆசிரியர் சேவையின் புதிய பிரமாணக் குறிப்பிற்கமைய 2-II தரத்திலுள்ள ஆசிரியர்களின் பதவியுயர்வுக்கான இரண்டாம் வினைத் திறமைகாண் தடைப்பரீட்சைகளின் இதவடிவங்கள் (Efficiency Bar Examination Module) நிறைவுபெறுதலும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வின் முதலாம் கட்டம் காத்தான்குடி ஆசிரியர் வாண்மை விருத்தி நிலையத்தில் (காத்தான்குடி ஆசிரியர் மத்திய நிலையம்) 25/06/2024 செவ்வாய்க்கிழமை அன்று முகாமையாளர் Mr. A. Riyas (SLTES) தலைமையில் இடம்பெற்றது..  Professional Development Center for Teachers - Kattankudy 

ஆசிரியர்களுக்கான EB Module (2-II) நிறைவு பெறுதலும் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வும் - 2 ஆம் கட்டம் 27.06.2024 (வியாழக்கிழமை)

ஆசிரியர்களின் கௌரவத்தை நோக்கிய அடிப்படையில் காத்தான்குடி ஆசிரியர் வாண்மை விருத்தி நிலையத்தில் இருந்து இவ்வருடம் E.B.  நிகழ்ச்சி திட்டத்தை நிறைவு செய்த 170  ஆசிரியர்களுக்கான கௌரவிப்பு மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு கடந்தவாரம் ஆசிரியர் வாண்மை விருத்தி நிலையைத்தின் நிறைவேற்றுத்தர முகாமையாளரும் சிரேஷ்ட விரிவுரையாளருமான எ.றியாஸ் அவர்களின் தலைமையில்  நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு மட்டக்களப்பு மத்தி கல்வி வலய பணிப்பாளர் எம்.எம்.ஜவாத் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்ததுடன் கௌரவ அதிதிகளாக பிரதி கல்வி பணிப்பாளர்கள், கணக்காளர்கள் பொறியியலாளர்கள், விரிவுரையாளர்கள், ஏறாவூர் லயன்ஸ் அணியினர்கள் மற்றும் சமூக  நலன் விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடதக்கது.