Skip to main content

Posts

ஆசிரியர்களுக்கான EB Module (2-II) நிறைவு பெறுதலும் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வும் - 2 ஆம் கட்டம் 27.06.2024 (வியாழக்கிழமை)

ஆசிரியர்களின் கௌரவத்தை நோக்கிய அடிப்படையில் காத்தான்குடி ஆசிரியர் வாண்மை விருத்தி நிலையத்தில் இருந்து இவ்வருடம் E.B.  நிகழ்ச்சி திட்டத்தை நிறைவு செய்த 170  ஆசிரியர்களுக்கான கௌரவிப்பு மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு கடந்தவாரம் ஆசிரியர் வாண்மை விருத்தி நிலையைத்தின் நிறைவேற்றுத்தர முகாமையாளரும் சிரேஷ்ட விரிவுரையாளருமான எ.றியாஸ் அவர்களின் தலைமையில்  நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு மட்டக்களப்பு மத்தி கல்வி வலய பணிப்பாளர் எம்.எம்.ஜவாத் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்ததுடன் கௌரவ அதிதிகளாக பிரதி கல்வி பணிப்பாளர்கள், கணக்காளர்கள் பொறியியலாளர்கள், விரிவுரையாளர்கள், ஏறாவூர் லயன்ஸ் அணியினர்கள் மற்றும் சமூக  நலன் விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடதக்கது.

ஆசிரியர்களுக்கான EB Module (2-II) நிறைவு பெறுதலும் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வும் - 1ஆம் கட்டம் 25.06.2024 (செவ்வாய்க்கிழமை)

இலங்கை ஆசிரியர் சேவையின் புதிய பிரமாணக் குறிப்பிற்கமைய 2-II தரத்திலுள்ள ஆசிரியர்களின் பதவியுயர்வுக்கான இரண்டாம் வினைத் திறமைகாண் தடைப்பரீட்சைகளின் இதவடிவங்கள் (Efficiency Bar Examination Module) நிறைவுபெறுதலும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வின் முதலாம் கட்டம் காத்தான்குடி ஆசிரியர் வாண்மை விருத்தி நிலையத்தில் (காத்தான்குடி ஆசிரியர் மத்திய நிலையம்) 25/06/2024 செவ்வாய்க்கிழமை அன்று முகாமையாளர் Mr. A. Riyas (SLTES) தலைமையில் இடம்பெற்றது..  Professional Development Center for Teachers - Kattankudy 

SLTS 2-I தரத்திற்கு பதவி உயர்வு பெறும் ஆசிரியர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு - 24.01.2024 (புதன்கிழமை)

  SLTS 2-II தரத்திலிருந்து 2-I தரத்திற்கு பதவி உயர்வு பெறும் ஆசிரியர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு - 24.01.2024

2-II ஆசிரியர்களுக்கான EB Module நிறைவு பெறுதலும் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வும் - 03/01/2024 (புதன்கிழமை)

இலங்கை ஆசிரியர் சேவையின் புதிய பிரமாணக் குறிப்பிற்கமைய 2-II தரத்திலுள்ள ஆசிரியர்களின் பதவியுயர்வுக்கான இரண்டாம் வினைத் திறமைகாண் தடைப்பரீட்சைகளின் இதவடிவங்கள் (Efficiency Bar Examination Module) நிறைவுபெறுதலும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் காத்தான்குடி ஆசிரியர் வாண்மை விருத்தி நிலையத்தில் (காத்தான்குடி ஆசிரியர் மத்திய நிலையம்) 03/01/2024 புதன்கிழமை அன்று முகாமையாளர் Mr. A. Riyas (SLTES) தலைமையில் இடம்பெற்றது..  மேலும் இந் நிகழ்விற்கு அதிதியாக,  காத்தான்குடி ஆசிரியர் வாண்மை விருத்தி நிலையத்தில் கடமை புரியும்  தொழில் வழிகாட்டல் உத்தியோகத்தரும் இரண்டாம் மொழி சிங்கள பயிற்சி நெறியின்  இணைப்பாளர் Mr. ALM. Rizvi (CGO) அவர்களும் ஏனைய உத்தியோகத்தர்களும்  கலந்து சிறப்பித்ததுடன் ஆசிரியர் சேவையில் 2-I இற்கு பதவி உயர்வு பெறும் ஆசிரியர்களை பாராட்டிக் கௌரவித்தார்கள்... Professional Development Center for Teachers - Kattankudy