Skip to main content

3-1 ஆசிரியர்களுக்கான EB Module நிறைவு பெறுதலும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் - 19.05.2022

மட்டக்களப்பு மத்தி வலயக்கல்விப் பணிமனையின் ஆசிரியர் வாண்மை விருத்தி நிலையத்தில் EB Module களைப் பூர்த்தி செய்துள்ள 108 ஆசிரியர்களுக்கான சான்றிதழ் வழங்கல் - 




இலங்கை ஆசிரியர் சேவையின் புதிய பிரமாணக் குறிப்பிற்கமைய 3-I தரத்திலுள்ள ஆசிரியர்களின் பதவியுயர்வுக்கான முதலாம் வினைத்திறமைகாண் தடைப்பரீட்சைகளின் இதவடிவங்கள் (Efficiency Bar Examination Module) நிறைவுபெறுதலும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் காத்தான்குடி ஆசிரியர் வாண்மை விருத்தி  நிலையத்தினால் (காத்தான்குடி ஆசிரியர் மத்திய நிலையம்) ஏறாவூர் மட்/மம/ அலிகார் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) இல் 19.05.2022 வியாழக்கிழமை அன்று இடம்பெற்றது. 


இந் நிகழ்வானது, காத்தான்குடி ஆசிரியர் வாண்மை விருத்தி நிலையத்தின் முகாமையாளரான திரு. A. Riyas (SLTES) அவர்களின் தலைமையில் இடம்பெற்றதுடன் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தினுடைய வலயக் கல்விப் பணிப்பாளரான Dr. SMMS. Umar Moulana அவர்கள் கலந்து சிறப்பித்தார்கள்.   அத்துடன் கெளரவ அதிதிகளாக, மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான திருமதி. MJF. Rifka (SLEAS) Deputy Director of Education (Administration), திரு. MHM. Ramees (SLEAS) - Deputy Director of Education (Development), திரு. VT. Ajmeer (SLEAS) - Deputy Director of Education (Management), திருமதி. J. Thajun Nisa (SLEAS) - Deputy Director of Education (Planning) என்பவர்கள் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்ததோடு,  உதவிக்கல்விப் பணிப்பாளர்களான, திரு. TMS. Ahamed (SLEAS) - Assistant Director of Education (Mathematics), திரு. MLM. Mutharris (SLEAS) - Assistant Director of Education (Phy.Edu), திரு. AGM. Hakeem (SLEAS) - Assistant Director of Education (History), திரு. AM. Mufasdeen (SLEAS) - Assistant Director of Education (Tamil), திரு. MI. Ahsab (SLEAS) - Assistant Director of Education (Commerce) ஆகியோரும் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர். 

மேலும் இவர்களுடன் சிறப்பு அதிதிகளாக, மத்தி கல்வி வலயத்தினுடைய கணக்காளரான திரு. SH. Nawfeek அவர்களும் மட்/மம/ அலிகார் தேசிய பாடசாலையின் அதிபர் திரு. MM. Moujooth (SLPS) அவர்களும் நிகழ்வில் பங்குபற்றினர்...

சுமார் 110 ஆசிரியர்கள் இந் நிகழ்ச்சித் திட்டத்தில் உள்வாங்கப்பட்டு சான்றிதழ்களைப் பெற்றுக் கொண்டதுடன் அவர்களின் அடுத்த தரத்திற்கான பதவியுயர்வுக்குச் செல்வதற்காக தெரிவு செய்யப்பட்டார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.. 

எனவே, ஆசிரியர்களின் வாண்மை விருத்தியினூடாக மாணவர்களின் சாதனைகள் இடம்பெற வேண்டும் என்ற அடிப்படையில் இவ் நிகழ்வானது ஒழுங்கமைக்கப்பட்டு சிறப்புடன் நடைபெற்று முடிந்தது...


_______

Mr. A. Riyas (SLTES)

முகாமையாளர் 

ஆசிரியர் வாண்மை விருத்தி நிலையம் - காத்தான்குடி

_______





















Click here to watch video: 



Source: விசேட பயிற்சியைப் பூர்த்தி செய்த ஆசிரியர்களுக்கு சான்றிதழ் வழங்கல்

Comments

Popular posts from this blog

2-II ஆசிரியர்களுக்கான EB Module நிறைவு பெறுதலும் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வும் - 28/02/2023 செவ்வாய்க்கிழமை

" ஆசிரியர்களை கௌரவிப்போம்." எனும் தொனிப்பொருளில் எமது காத்தான்குடி ஆசிரியர் வாண்மை விருத்தி நிலையத்தில் இடம்பெற்ற ஆசிரியர்களைப் பாராட்டி, சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு 28/02/2023 -----------------------------------------------------------------------------------------------------------------------------இலங்கை ஆசிரியர் சேவையின் புதிய பிரமாணக் குறிப்பிற்கமைய 2-II தரத்திலுள்ள ஆசிரியர்களின் பதவியுயர்வுக்கான இரண்டாம் வினைத் திறமைகாண் தடைப்பரீட்சைகளின் இதவடிவங்கள் (Efficiency Bar Examination Module) நிறைவுபெறுதலும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் காத்தான்குடி ஆசிரியர் வாண்மை விருத்தி நிலையத்தில் (காத்தான்குடி ஆசிரியர் மத்திய நிலையம்) 28/02/2023 செவ்வாய்க்கிழமைஅன்று முகாமையாளர் Mr. A. Riyas (SLTES) தலைமையில் இடம்பெற்றது..  மேலும் இந் நிகழ்விற்கு அதிதியாக, மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் வலயக் கல்விப் பணிப்பாளர்களான Mr. SMM. Ameer (SLEAS-I) அவர்களும் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் ஆரம்பப் பிரிவு ஆசிரிய ஆலோசகர்  Mrs. Thasleema Mohamed Rizvi (ISA) அவர்களும் கலந்து சிறப்பித்ததுடன்

2-I ஆசிரியர்களுக்கான EB Module நிறைவு பெறுதலும் செயல்நிலை ஆசிரியர் மாநாடும் - 21.12.2023

இன்று எமது ஆசிரியர் வாண்மை விருத்தி நிலையத்தில் இடம்பெற்ற ஆய்வு மாநாட்டின் சில பதிவுகள் . இதில் 90 (2-1) ஆசிரியர்கள் தங்களுடைய E.B. நிகழ்ச்சி திட்டத்தை நிறைவு செய்து கொண்டு செயல்நிலை ஆய்வுகளையும் (Action Research) சமர்ப்பித்தார்கள்.

2-II ஆசிரியர்களுக்கான EB Module நிறைவு பெறுதலும் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வும் - 03/01/2024 (புதன்கிழமை)

இலங்கை ஆசிரியர் சேவையின் புதிய பிரமாணக் குறிப்பிற்கமைய 2-II தரத்திலுள்ள ஆசிரியர்களின் பதவியுயர்வுக்கான இரண்டாம் வினைத் திறமைகாண் தடைப்பரீட்சைகளின் இதவடிவங்கள் (Efficiency Bar Examination Module) நிறைவுபெறுதலும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் காத்தான்குடி ஆசிரியர் வாண்மை விருத்தி நிலையத்தில் (காத்தான்குடி ஆசிரியர் மத்திய நிலையம்) 03/01/2024 புதன்கிழமை அன்று முகாமையாளர் Mr. A. Riyas (SLTES) தலைமையில் இடம்பெற்றது..  மேலும் இந் நிகழ்விற்கு அதிதியாக,  காத்தான்குடி ஆசிரியர் வாண்மை விருத்தி நிலையத்தில் கடமை புரியும்  தொழில் வழிகாட்டல் உத்தியோகத்தரும் இரண்டாம் மொழி சிங்கள பயிற்சி நெறியின்  இணைப்பாளர் Mr. ALM. Rizvi (CGO) அவர்களும் ஏனைய உத்தியோகத்தர்களும்  கலந்து சிறப்பித்ததுடன் ஆசிரியர் சேவையில் 2-I இற்கு பதவி உயர்வு பெறும் ஆசிரியர்களை பாராட்டிக் கௌரவித்தார்கள்... Professional Development Center for Teachers - Kattankudy