Skip to main content

ஆசிரிய பிரமாணக் குறிப்பு தடைதாண்டல் பரீட்சை மேற்பார்வை - THURSDAY, JULY 11, 2019

ஆசிரிய பிரமாணக் குறிப்பு தடைதாண்டல் பரீட்சை மேற்பார்வை




கடந்த 06.07.2019 - 08.07.2019 காலப்பகுதியில் தரம் 2 ii ஆசிரியர்களுக்கான தடைதாண்டல் செயலமர்வு மட்டக்கப்பு மத்தி கல்வி வலயத்தின் தொழில் வாண்மை விருத்தி ஆசிரிய மத்திய நிலையத்தினால் நடாத்தப்பட்டு வந்தது.

இதில் 2ம் கட்ட குழுவுக்கு இணைப்பாட விதான செயற்பாடு மற்றும் முகாமைத்துவம் தொடர்பான மொடியூல் நடைபெற்றது. ஆசிரிய வாண்மை விருத்தியினை நோக்காகக் கொண்டு நடாத்தப்படுகின்ற இப்பயிற்சியானது ஆசிரியர்களின் அறிவு, திறன் ,மனப்பாங்கு, நடத்தை ஆகியவற்றில் பாரிய பங்களிப்பினைச் செய்வதோடு, மாணவர்களையும் இது சென்றடைகின்றது.

ஆசிரியர்களுக்கான தொழில் வாண்மை விருத்திச் செயற்பாட்டினை காத்தான்குடி ஆசிரிய மத்திய நிலையம் தொடர்ச்சியாக கட்டம் கட்டமாக நடாத்தி வருவதோடு, அதன் மேற்பார்வை மற்றும் வழிகாட்டுதல்களை மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் வலயக்கல்விப் பணிப்பாளர் கலாநிதி.எஸ்.எம்.எம்.எஸ்.உமர் மௌலான (SLEAS)  அவர்கள் வழங்கிவருவதோடு, அதன் விரிவுரைகளையும், நெறிப்படுத்தல்களையும் சிறப்பான முறையில் மேற்கொள்கின்றார்கள்.

இங்கு நாம் மேலே இந்நடவடிக்கையில் ஈடுபட்ட வலயக்கல்விப் பணிப்பாளர் அவர்களையும், ஆசிரிய மத்திய நிலையத்தின் விரிவரையாளராகவும், முகாமைத்துவ நடவடிக்கைகளையும்  மேற்கொண்டு வருகின்ற  ஏ.றியாஸ்  (SLTES) அவர்களையும் பங்குபற்றுனர்களாக கலந்துகொண்டுள்ள ஆசிரியர்களையும் இங்கு காணலாம்.


Source: பரீட்சை மேற்பார்வை


Comments

Popular posts from this blog

2-II ஆசிரியர்களுக்கான EB Module நிறைவு பெறுதலும் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வும் - 28/02/2023 செவ்வாய்க்கிழமை

" ஆசிரியர்களை கௌரவிப்போம்." எனும் தொனிப்பொருளில் எமது காத்தான்குடி ஆசிரியர் வாண்மை விருத்தி நிலையத்தில் இடம்பெற்ற ஆசிரியர்களைப் பாராட்டி, சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு 28/02/2023 -----------------------------------------------------------------------------------------------------------------------------இலங்கை ஆசிரியர் சேவையின் புதிய பிரமாணக் குறிப்பிற்கமைய 2-II தரத்திலுள்ள ஆசிரியர்களின் பதவியுயர்வுக்கான இரண்டாம் வினைத் திறமைகாண் தடைப்பரீட்சைகளின் இதவடிவங்கள் (Efficiency Bar Examination Module) நிறைவுபெறுதலும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் காத்தான்குடி ஆசிரியர் வாண்மை விருத்தி நிலையத்தில் (காத்தான்குடி ஆசிரியர் மத்திய நிலையம்) 28/02/2023 செவ்வாய்க்கிழமைஅன்று முகாமையாளர் Mr. A. Riyas (SLTES) தலைமையில் இடம்பெற்றது..  மேலும் இந் நிகழ்விற்கு அதிதியாக, மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் வலயக் கல்விப் பணிப்பாளர்களான Mr. SMM. Ameer (SLEAS-I) அவர்களும் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் ஆரம்பப் பிரிவு ஆசிரிய ஆலோசகர்  Mrs. Thasleema Mohamed Rizvi (ISA) அவர்களும் கலந்து சிறப்பித்ததுடன்

2-I ஆசிரியர்களுக்கான EB Module நிறைவு பெறுதலும் செயல்நிலை ஆசிரியர் மாநாடும் - 21.12.2023

இன்று எமது ஆசிரியர் வாண்மை விருத்தி நிலையத்தில் இடம்பெற்ற ஆய்வு மாநாட்டின் சில பதிவுகள் . இதில் 90 (2-1) ஆசிரியர்கள் தங்களுடைய E.B. நிகழ்ச்சி திட்டத்தை நிறைவு செய்து கொண்டு செயல்நிலை ஆய்வுகளையும் (Action Research) சமர்ப்பித்தார்கள்.

2-II ஆசிரியர்களுக்கான EB Module நிறைவு பெறுதலும் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வும் - 03/01/2024 (புதன்கிழமை)

இலங்கை ஆசிரியர் சேவையின் புதிய பிரமாணக் குறிப்பிற்கமைய 2-II தரத்திலுள்ள ஆசிரியர்களின் பதவியுயர்வுக்கான இரண்டாம் வினைத் திறமைகாண் தடைப்பரீட்சைகளின் இதவடிவங்கள் (Efficiency Bar Examination Module) நிறைவுபெறுதலும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் காத்தான்குடி ஆசிரியர் வாண்மை விருத்தி நிலையத்தில் (காத்தான்குடி ஆசிரியர் மத்திய நிலையம்) 03/01/2024 புதன்கிழமை அன்று முகாமையாளர் Mr. A. Riyas (SLTES) தலைமையில் இடம்பெற்றது..  மேலும் இந் நிகழ்விற்கு அதிதியாக,  காத்தான்குடி ஆசிரியர் வாண்மை விருத்தி நிலையத்தில் கடமை புரியும்  தொழில் வழிகாட்டல் உத்தியோகத்தரும் இரண்டாம் மொழி சிங்கள பயிற்சி நெறியின்  இணைப்பாளர் Mr. ALM. Rizvi (CGO) அவர்களும் ஏனைய உத்தியோகத்தர்களும்  கலந்து சிறப்பித்ததுடன் ஆசிரியர் சேவையில் 2-I இற்கு பதவி உயர்வு பெறும் ஆசிரியர்களை பாராட்டிக் கௌரவித்தார்கள்... Professional Development Center for Teachers - Kattankudy