ஆசிரியர்களுக்கான EB Module (2-II) நிறைவு பெறுதலும் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வும் - 2 ஆம் கட்டம் 20.08.2024 (புதன்கிழமை)
இலங்கை ஆசிரியர் சேவையின் புதிய பிரமாணக் குறிப்பிற்கமைய 2-II தரத்திலுள்ள ஆசிரியர்களின் பதவியுயர்வுக்கான இரண்டாம் வினைத் திறமைகாண் தடைப்பரீட்சைகளின் இதவடிவங்கள் (Efficiency Bar Examination Module) நிறைவுபெறுதலும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வின் இரண்டாம் கட்டம் காத்தான்குடி ஆசிரியர் வாண்மை விருத்தி நிலையத்தில் (காத்தான்குடி ஆசிரியர் மத்திய நிலையம்) 25/06/2024 செவ்வாய்க்கிழமை அன்று முகாமையாளர் Mr. A. Riyas (SLTES) தலைமையில் இடம்பெற்றது.. மேலும் 25/06/2024 அன்று இடம்பெற்ற சான்றிதழ் நிகழ்வில் சன்றிதல்களைப் பெற முடியாமல் போனவர்களும் முன்னைய குழுமங்களில் பூரணப்படுத்தாத மோடியுல்களை புதிய குழுமத்துடன் இணைந்து பூரனப்படுத்திய ஆசிரியர்களும் தங்களது சான்றிதல்களைப் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் இந்த நிகழ்வில் கொளரவ அதிதியாக, மட்டக்களப்பு மத்தி வலயத்தின் வலயக் கல்விப் பணிப்பாளர் Mr. MM. Jawad (SLEAS) அவர்களும், மட்டக்களப்பு மத்தி வலயத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் Mr. M. Mufasdeen (SLEAS) அவர்களும் கலந்து கொண்டதுடன் காத்தான்குடி ஆசிரியர் வாண்மை விருத்தி நிலையத்தில் புதிதாக இணைக்கப்பட்ட விரிவுரையாளர்களான Mr – P. Suvendrarajah (SLTES) மற்றும் Mrs. – N. Premendra (SLTES) ஆகிய ஆசிரிய கல்வியலாளர்கும் ஏனைய உத்தியோகத்தர்களும் கலந்து சிறப்பித்ததுடன் ஆசிரியர் சேவையில் 2-I இற்கு பதவி உயர்வு பெறும் ஆசிரியர்களை பாராட்டிக் கௌரவித்தார்கள்...
Professional Development Center for Teachers - Kattankudy

.jpeg)
.jpeg)



.jpeg)

.jpeg)

Comments
Post a Comment